*************************************Destination: "The Destiny"*************************************

Followers

Saturday, January 14, 2012

“மனப் பொங்கல்”:

களை எடுத்து கலைத்து போகும் உழவருக்கும் பொங்கல்...
காளை நிறுத்தி களத்தில் மோதும் காளையருக்கும் பொங்கல்...!!!

ஏழு சொல் உலகம் கற்ற வள்ளுவனுக்கும் பொங்கல்...
ஏழு கோடி பிள்ளை பெற்ற தமிழன்னைக்கும் பொங்கல்...!!!

காதல் வீரம் கண்ணில் கொண்ட தமிழனுக்கும் பொங்கல்...
சோழர் பாண்டியருக்கு தண்ணீர் தராத இந்தியனுக்கும் பொங்கல்...!!!

ஆண்டுகள் பலவும் எமனை ஏமாற்றும் கலைஞருக்கும் பொங்கல்...
கோடிகள் சேர்த்து கம்பியை எண்ணும் தொண்டருக்கும் பொங்கல்...!!!

ஓட்டு போட்டால் வேட்டு வைக்கும் அம்மாவுக்கும் பொங்கல்...
அவள் காலைத் தொட்டு கும்பிடும் அமைச்சருக்கும் பொங்கல்...!!!

ஆமை ஊமை நாட்டை ஆளும் மன்மோகனுக்கும் பொங்கல்...
மகனை மகளை மன்னர் ஆக்கும் சோனியாவுக்கும் பொங்கல்...!!!

ரதம் ஏறி பதவி தேடும் அத்வானிக்கும் பொங்கல்...
கிரகம் யாவும் கோளை விடும் விஞ்ஞானிக்கும் பொங்கல்...!!!

பாரை வென்று பெருமை தந்த தோனியாருக்கும் பொங்கல்...
நூறு நூறை சொந்தம் கொண்ட சச்சினுக்கும் பொங்கல்...!!!

உண்ணாமல் லஞ்சம் ஒழிக்க வந்த அன்னாவுக்கும் பொங்கல்...
உறங்காமல் ஊரைக் காத்து நீர்த்த வீரனுக்கும் பொங்கல்...!!!

ஆப்கானை அழித்து நோபல் சேர்க்கும் ஒபாமாவுக்கும் பொங்கல்...
அறிவை அளித்து வளமை வளர்க்கும் அப்பாஅம்மாவுக்கும் பொங்கல்...!!!

அச்சம் மடம் நாணம் பயின்ற பெண்மணிக்கும் பொங்கல்...
அன்பு பண்பு சொல்லி தந்த கண்மணிக்கும் பொங்கல்...!!!

ஞானத்தால் உலகம் வெல்ல பிறந்த மாணவருக்கும் பொங்கல்...
சொல்லாமல் நான் விட்டுப் போன அனைவருக்கும் பொங்கல்...!!!

பொங்கலோ பொங்கல்...!!!

--- “ஜோ” ---
© reserved, 2012...